தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சதி தொடர்பாக இருவர் கைது! - Maharashtra news in tamil

NIA arrests two in jaipur terror conspiracy case: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சதி தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, மகாராஷ்டிராவில் இருந்து இருவரை கைது செய்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 6:32 PM IST

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்):ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சதி தொடர்பாக இருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் 28) கைது செய்து உள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலம் ரட்லாம் பகுதியைச் சேர்ந்த முகம்மது யூனுஸ் சகி மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரை மகாராஷ்டிராவில் வைத்து என் ஐஏ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

இது தொடர்பாக என்ஐஏ தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், “இந்தியாவில் உறங்கிக் கொண்டிருக்கும் தொகுதிகளை தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உடன் தொடர்புபடுத்துவதற்குத் தேவையான அனைத்தையும் அந்த அமைப்பு உடன் செயல்படுத்துவதற்கு இவர்கள் இருவரும் உதவி உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் வெடிக்கும் பொருட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் பொருட்களுக்கான (Improvised Explosive Devices - IEDs)உதிரி பாகங்கள் ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். அது மட்டுமல்லாமல், கைது செய்யப்பட்ட இருவரும் மேம்படுத்தப்பட்ட வெடி பொருட்களை தயாரிக்கும் முறையை பலருக்கும் கற்றுக் கொடுத்து வந்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

அதிலும், இம்ரான் கானின் கோழிப்பண்ணையில் இருந்து மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களின் உதிரி பாகங்கள் கிடைத்து உள்ளன. மேலும், ராஜஸ்தானில் இருந்து மகாராஷ்டிரா வந்த இருவரும் புனேவில் வந்து தங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல், இங்கு இருந்து இரண்டு பயிற்சிப் பட்டறை மூலம் மேம்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் தயாரிப்பு பயிற்சியினையும் இவர்கள் வழங்கி வந்து உள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த 2022 செப்டம்பரில் இம்ரான் கான் உள்பட 10 பேர் மீது என் ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. மேலும், இது தொடர்பாக நிம்பஹேராவில் வெடிகுண்டுகள் உடன் மூன்று பயங்கரவாதிகள் பிடிபட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜெய்ப்பூரில் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் காரில் ஜெய்ப்பூரில் இருந்து வெடிபொருட்களை கொண்டு வந்து கொண்டிருந்தபோது, சதார் காவல் நிலைய அதிகாரிகள் ஏப்ரல் 30ஆம் தேதி மறித்து 12 கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். அப்போது சுபைர், அல்தம்ஷ் மற்றும் சைபுல்லா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:பாலியல் தொழிலுக்காக பங்களாதேஷ் சிறுமி கடத்தல்? - ஒரு பெண் உள்பட மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details