டெல்லி:இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல குற்றச்செயல்களை செய்து வந்த மூன்று தாதாக்களை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் டெல்லியில் கைது செய்துள்ளனர். இவர்கள் தலைநகரில் பயங்கவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் 3 தாதாக்கள் கைது - டெல்லி
டெல்லியில் கொலை, கொள்ளை முதலிட்ட பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த மூன்று தாதாக்களை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

தலைநகரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 3 தாதாக்கள் கைது
அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த நீரஜ் சேராவாட், ஹரியானாவைச் சேர்ந்த கௌசல் எனும் நரேஷ் சவுத்ரி, பஞ்சாபைச் சேர்ந்த புபிந்தர் சிங் எனும் புபி ராணா கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை, ஆயுத கடத்தல்கள் மக்களை அச்சுறுத்தல், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்..? தொடங்கிய வேட்புமனு தாக்கல்..!