தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட நபர் கைது! - ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் கைது

டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பணியாற்றியது தொடர்பான வழக்கில் மொஹ்சின் அகமது என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 7, 2022, 7:17 PM IST

டெல்லி: டெல்லி பட்லா ஹவுஸ் பகுதியில் வசித்து வரும் மொஹ்சின் அகமது என்பவர், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை, கடந்த ஜூன் 25ஆம் தேதி மொஹ்சின் அகமது மீது வழக்குப்பதிவு செய்தது.

இதனிடையே நேற்றிரவு (ஆகஸ்ட் 6) அகமதுவின் வீட்டில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மொஹ்சின் அகமது கைது செய்யப்பட்டார். அவர், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால், டெல்லி போலீசார் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17% அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details