உத்தரப்பிரதேசம்: 'வாய்ஸ் ஆப் ஹிந்த்' எனும் வரையரைத்திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளை புலனாய்வு செய்ததில், ஒரு பகுதியாக வாரணாசியைச்சேர்ந்த தீவிரமான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்த ஒருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
பசித் கலாம் சித்திக்(24) எனும் இவர் பல பயங்கரவாத செயல்களிலும், இந்தியாவிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்-ற்கு இளைஞர்களை தயார் செய்து அனுப்புவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று பயங்கரவாத எதிர்ப்புப் படையினருக்கு எதிராக சூமோட்டோ வழக்காக, நீதிமன்றமே பதிந்த வழக்காகப் பதியப்பட்டது.
மேலும், இந்த சித்திக் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் நெருங்கிய தொடர்புடனும், அவர்களின் ‘வாய்ஸ் ஆப் குரசான்’ எனும் நாளிதழின் பதிப்பு, உருவாக்கம், பரப்புரை ஆகியவற்றில் ஐஎஸ்ஐஎஸ் பிரசாரங்களைப் பரப்புவது என அனைத்திலும் ஈடுபட்டிருந்தார். மேலும், “ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர்கள் அமைப்பினரின் வழிகாட்டுதல் படி ‘பிளாக் பவுடர்’ போன்ற வெடிப்பொருட்கள் பற்றி தெரிந்துகொண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த இவர் முயன்றுள்ளார்” என மூத்த புலனாய்வு முகமை அலுவலர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி,டெலிகிராம் குழுக்களைப் பயன்படுத்தி வெடிப்பொருட்களை பயன்படுத்துவது குறித்து பயின்று வந்ததாகவும் விரைவில் இவர் தீவிர ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இயங்கத் தயாராகி இருந்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குஜராத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வேலூர் திருட்டுக் கும்பல்!..