தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: 4 பேருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்! - கேரள தங்கக் கடத்தல்

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை கைதுசெய்ய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் ப்ளூ கார்னர் நோட்டீஸ் கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

NIA
NIA

By

Published : Nov 9, 2020, 8:36 PM IST

கேரள மாநிலம் தங்கக் கடத்தல் வழக்கில் 30-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை நடத்திவருகின்றன. இந்த நிலையில், மேலும் 5 பேருக்கு வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள், "குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரும் கோழிக்கோட்டை பூர்விகமாக கொண்டவர்கள். அவர்களில் முகமது அஸ்லமை (44) என்பவரைத் தவிர, மீதமுள்ள அப்துல் லத்தீப் கே(47), நசிருதீன் ஷா(32), சபு புல்லாரா (36), மஞ்சு (35) ஆகிய நான்கு பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளனர்.

அதனால் அவர்களைக் கைதுசெய்ய ப்ளூ கார்னர் நோட்டீஸ் கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர். தற்போது முகமது அஸ்லம் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கேரளா தங்க கடத்தல் வழக்கு: முன்னாள் முதன்மைச் செயலாளருக்கு 7 நாள் காவல்!

ABOUT THE AUTHOR

...view details