மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி மத்திய அரசு, பாகிஸ்தானிடம் பலமுறை கோரிக்கை விடுத்தது. ஆனால், தாவூத் பாகிஸ்தானில் இல்லை என அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது.
இதனிடையே ஆயுதங்கள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட வேலைகளில் தாவூத் இப்ராஹிமும், அவரது கூட்டாளிகளும் ஈடுபட்டு வருவதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், நிழல் உலக தாதா - தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை(NIA) அறிவித்துள்ளது.