டெல்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு குறைந்த நேரத்தில் சாலை அமைத்து கின்னஸ் சாதனை புரியும் முயற்சியை நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. அதன்படி மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி -அகோலா மாவட்டங்களுக்கு இடையே 75 கி.மீ சாலையை வெறும் 105 மணி நேரத்தில் அமைத்து நெடுஞ்சாலைத்துறை கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "அமராவதி -அகோலா மாவட்டங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை 75 கி.மீ தூரம் வெறும் 105 மணி நேரம் 33 நிமிடங்களில் அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஜூன் 3ஆம் தேதி காலை 7.27 மணிக்கு தொடங்கி நேற்று ஜுன் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதன் மூலம் குறைந்த நேரத்தில் தரமான சாலை அமைத்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.