ராஜஸ்தான்: தேசிய பசுமை தீர்ப்பாய அமைப்பு கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறியதற்காக ராஜஸ்தான் அரசுக்கு 3,000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைக்கான விதிமுறைகளை அமல்படுத்துவதை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை சரிசெய்ய NGT(தேசிய பசுமை தீர்ப்பாயம்) சட்டத்தின் பிரிவு 15இன் கீழ் இந்த இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
இது குறித்து பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் கூறுகையில், ‘மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டு அமைப்புகளை அமைத்தல், தற்போதுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளின் அமைப்புகள்/செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புறங்களில் முறையான மல கழிவுநீர் மற்றும் கசடு மேலாண்மை வசதிகளை அமைத்தல் ஆகியவை அடங்கும்’ எனத் தெரிவித்தார்.