தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்டர்நெட் வசதி கொடுத்த தொண்டு நிறுவனம்... டிஜிட்டலாக மாறிய கர்நாடகா கிராமம் - மத்ரிபூமி சேவா அறக்கட்டளை

பெங்களூரு: கர்நாடகாவின் முதல் இலவச இன்டர்நெட் வசதி பெற்ற கிராமமாக சிக்கனஹள்ளி மாறியுள்ளது.

karnataka
கர்நாடகா

By

Published : Apr 1, 2021, 8:29 PM IST

கர்நாடகாவில் முழுமையான இன்டர்நெட் வசதி பெற்ற கிராமமாக சிக்கனஹள்ளி மாறியுள்ளது. மத்ரிபூமி சேவா என்கிற அறக்கட்டளை, யூத் பிராட்பேண்டு நிறுவனத்துடன் இணைந்து கிராமம் முழுவதும் இணைய பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டத்தை மேற்கொண்டனர்.

ராமநகரா மாவட்டத்தில், சிக்கனஹள்ளி கிராமத்திற்கு இணைய வசதி கொடுத்ததன் மூலம், கரோனா காலத்தில் வீட்டிலிருக்கும் ஏழை மாணவர்களின் ஆன்லைன் வகுப்பிற்கு உபயோகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

டிஜிட்டலாக மாறிய கர்நாடகா கிராமம்

ஸ்மார்ட்போன்கள், கணினிகள் இல்லாமல் தவிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக, மத்ரிபூமி குழுவினர் இந்த முயற்சியை மேற்கொண்டனர். இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம், சாதாரண கிராமத்தைத் தொழில் நுட்ப கிராமமாக மாற்றியுள்ளது.

இக்கிராமத்தில் சுமார் 25 இடங்களில் இலவச இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. கிராமவாசிகள் இப்போது டிஜிட்டல் கல்வியறிவு பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:சிஏஏ, நீட் தேர்வு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details