தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் பார்ட்னர்கள் அதிகம்... மத்திய அரசின் ஆய்வில் ட்விஸ்ட்... - ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான செக்ஸ் பார்ட்னர்கள்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாட்டின் 11 மாநிலங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக செக்ஸ் பார்ட்னர்கள் இருப்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் முழுவிவரம் பின்வருமாறு.

NFHS stated women have more sex partners than men in 11 states/UTs
NFHS stated women have more sex partners than men in 11 states/UTs

By

Published : Aug 19, 2022, 2:11 PM IST

Updated : Aug 20, 2022, 1:19 PM IST

டெல்லி: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், ஜம்மு மற்றும் காஷ்மீர், மத்திய பிரதேசம், அசாம், லடாக், லட்சத்தீவு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான செக்ஸ் பார்ட்னர்கள் இருப்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மொத்தமாக 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 707 மாவட்டங்களில் திருமணமாக ஆண்கள், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 1.1 லட்சம் பெண்கள், 1 லட்சம் ஆண்கள் பங்கேற்றனர். 2019ஆம் ஆண்டும் முதல் 2021ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 18) வெளியாகியுள்ளன.

அந்த தரவுகளில், ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், மத்தியப் பிரதேசம், அசாம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள் செக்ஸ் பார்ட்னர்களை கூடுதலாக வைத்துள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண்களுக்கான செக்ஸ் பார்ட்னர்களின் விழுக்காடு 1.8ஆக உள்ளது. மறுப்புறம் பெண்களின் செக்ஸ் பார்ட்னர்கள் விழுக்காடு 3.1ஆக உள்ளது.

ஆனால், இந்த பெண்கள் செக்ஸ் பார்ட்னர்கள் வைத்திருந்தாலும் அவர்களுடன் தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக்கொள்வது கிடையாது. இந்த விழுக்காடு ஆண்களை விட பெண்களுக்கு குறைவாகவே உள்ளது. அதாவது மேற்கூறிய தரவுகளில் உள்ள 4 விழுக்காடு ஆண்கள் தங்களது செக்ஸ் பார்ட்னர்களுடன் தொடர்ந்து உடலுறவு வைத்துக் கொள்கின்றனர். ஆனால் பெண்கள் செக்ஸ் பார்ட்னர்கள் வைத்திருந்தாலும், தொடர்ந்து உடலுறவு வைத்துக்கொள்வதில்லை. இதில் பெண்களின் விழுக்காடு 0.5ஆக உள்ளது. இந்த ஆய்வில் கணவனை இழந்த பெண்களும், மனைவியை இழந்த ஆண்களும் பங்கேற்றது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: குரங்கம்மை தொற்று 20 விழுக்காடு அதிகரிப்பு... 92 நாடுகளில் பரவல்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...

Last Updated : Aug 20, 2022, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details