விண்ணில் பாயவிருக்கும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று மாலை 3:02 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட், இன்று மாலை 3:02 மணிக்கு 1-ஆவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் பாய்கிறது.
பிகாரில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு!
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தேர்தல், கெவதி தொகுதியில் போட்டியிடும் அப்துல் பாரி சித்திகி, பிகாரிகஞ்ச் தொகுதியில் போட்டியிடும் சரத் யாதவின் மகள் சுபாஷினி யாதவ், சஹர்சாவிலிருந்து போட்டியிடும் லவ்லி ஆனந்த், மாதூபுராவிலிருந்து நிகில் மண்டல் மற்றும் அமூரைச் சேர்ந்த அக்தருல் இமான் போன்ற தலைவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும். இது மட்டுமின்றி எட்டு அமைச்சர்களும் களத்தில் உள்ளனர்.
அனைத்துவித பட்டாசுகளுக்கும் இன்று முதல் தடை!