ஐபிஎல் 2021: பிசிசிஐ ஆலோசனை!
ஐபிஎல் 2021 தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பான முக்கிய தகவல், இன்று (மே.29) நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்திற்கு பின்னர் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் மதியம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.
3ஆவது ஒருநாள் போட்டி: இலங்கை வெற்றி
டாக்காவில் பங்களாதேஷ் - இலங்கை இடையே நடந்த 3ஆவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.
கத்தரி வெயில் இன்று நிறைவு
அக்னி நட்சத்திரம் எனும், கத்திரி வெயில் காலம் இன்றுடன் (மே.29) முடிவடைகிறது. இந்த மாதம், 4ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது.
மழைக்கு வாய்ப்பு
வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தபால் துறையில் வேலை
இந்திய தபால் துறையில் காலியாகவுள்ள 4,368 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மே.29) நிறைவடைகிறது.