தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

By

Published : Jul 5, 2021, 7:01 AM IST

புதிய தளர்வுகள் அமல்:

புதிய தளர்வுகள் அமல்

தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. இதில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், போக்குவரத்து என பலவற்றுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரியில் இன்று சுற்றுலா தலங்கள் திறக்கப்படாது:

நீலகிரியில் இன்று சுற்றுலா தலங்கள் திறக்கப்படாது

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், நீலகிரியில் சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் திறப்பது குறித்த தெளிவான அறிவிப்பு இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

பெட்ரோல் விலை அதிகரிப்பு:

பெட்ரோல் விலை அதிகரிப்பு

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 100.44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சதாப்தி ரயில் சேவை இயக்கம்:

சதாப்தி ரயில் சேவை இயக்கம்

கோவை - சென்னை சதாப்தி ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படவுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

பிவி சிந்து பிறந்தநாள்:

பிவி சிந்து பிறந்தநாள்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இன்று தனது 26ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details