தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - மேகதாது விவகாரம்

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

By

Published : Jul 4, 2021, 6:35 AM IST

மேகதாது விவகாரம்: ஸ்டாலின் கடிதம்!

மேகதாது விவகாரம்: ஸ்டாலின் கடிதம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக ஸ்டாலின் இன்று கடிதம் அனுப்புவார் என நீர்வளத்துறை துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று ஸ்டாலின் கடிதம் எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு விழா:

ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு விழா

புகழ்பெற்ற ஏர்வாடி தர்ஹாவின் சந்தனக்கூடு விழா இன்று நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி இவ்விழா நடைபெறவுள்ளது.

மதுரை - சண்டிகர் ரயில் சேவை முன்பதிவு:

மதுரை - சண்டிகர் ரயில் சேவை முன்பதிவு

ஜூலை 11 முதல் மதுரை - சண்டிகர் ரயில் சேவை தொடங்கவுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை:

10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

மதுரை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நஸீம் பானு பிறந்தநாள்:

நஸீம் பானு பிறந்தநாள்

இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டாரான நஸீம் பானு பிறந்த தினம் இன்று. இவர் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும், தன் நடிப்பாற்றலால் பலரையும் ஈர்த்தவர்.

ABOUT THE AUTHOR

...view details