தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - News Today jan 24

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்.

இன்றைய
இன்றைய

By

Published : Jan 24, 2021, 7:07 AM IST

1. உத்தரகாண்ட் மாநிலத்தில் `ஒரு நாள் முதலமைச்சர்'

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதலமைச்சராக ஸ்ரீஸ்தி கோஸ்வாமி என்ற மாணவி, இன்று (ஜனவரி 24) பதவியேற்க உள்ளார்.

ஒரு நாள் முதலமைச்சர்

2. இந்தியா-சீனா இன்று 9ஆவது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை!

கிழக்கு லடாக் விவகாரத்தில் இந்தியாவும் சீனாவும் ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை இன்று (ஜன.24) நடைபெறுகிறது.

ராணுவ பேச்சுவார்த்தை

3. கோவையில் 2ஆம் நாள் சுற்றுப் பயணத்தில் முதலமைச்சர் பழனிசாமி!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி

4. அஸ்ஸாம் செல்லும் அமித்ஷா

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று அஸ்ஸாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

அமித்ஷா

5. ஈரோடு வரும் ராகுல் காந்தி

தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, இன்று ஈரோடு வருகிறார். அங்கு காந்தி, காமராஜர், பெரியார் சிலைகள் உள்பட 8 தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details