தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - today latest news

மே 28, இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

இன்றைய நிகழ்வுகள்
newstoday

By

Published : May 28, 2021, 6:32 AM IST

புயல் பாதிப்பு: பிரதமர் மோடி ஆய்வு

'யாஸ்' புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்கு வங்க மாநில பகுதிகளை, பிரதமர் மோடி இன்று (மே.28) ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்கிறார்.

பிரதமர் மோடி

43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மிதமான மழை

கேரள சட்டப்பேரவை: ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை

கேரளா சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று உரையாற்றுகிறார். 15ஆவது கேரள சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 24ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது

ஆரிப் முகமது கான்

ABOUT THE AUTHOR

...view details