தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 23, 2021, 6:46 AM IST

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு #ETV Bharat News Today

ஆகஸ்ட் 23ஆம் தேதியின் நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

NEWS TODAY
NEWS TODAY

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஆக. 23) மீண்டும் கூடுகிறது. இன்றைய நாள் நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.

சட்டப்பேரவை

தமிழ்நாட்டில் ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் இன்றுமுதல் (ஆக. 23) நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி, திரையரங்குகள், கடற்கரைகள் திறக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தளர்வுகள் அமல்

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் இன்றுமுதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5.30 மணிமுதல் இரவு 11 மணிவரை செயல்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

இன்று அறிமுகமாகும் விவோ Y33s ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான விவோ Y33s ஸ்மார்ட்போன், இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் ரூ.17 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விவோ Y33s ஸ்மார்ட்போன்

ABOUT THE AUTHOR

...view details