தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு #ETV Bharat News Today - world photography day

ஆகஸ்ட் 19ஆம் தேதியின் நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

NEWS TODAY
NEWS TODAY

By

Published : Aug 19, 2021, 6:51 AM IST

Updated : Aug 19, 2021, 7:01 AM IST

ஆளுநருடன் ஓபிஎஸ் - இபிஎஸ் இன்று சந்திப்பு!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 19) சந்தித்துப் பேசவுள்ளனர்.

ஆளுநருடன் ஓபிஎஸ் - இபிஎஸ் இன்று சந்திப்பு

பட்ஜெட் விவாதத்தின் மீது அமைச்சர்கள் இன்று பதில் உரை

திருத்திய நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு துறையின் அமைச்சர்கள் இன்று பதிலுரை அளிக்கின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்

இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உத்தரவு

'அவன் இவன்' திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாகக் காட்சி அமைத்ததாகக் கூறி, சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பாலா, அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஆக. 19) கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என, நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்

இயக்குநர் பாலா

நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

குமரி அனந்தனின் மனைவி உடல் இன்று நல்லடக்கம்

முதுபெரும் அரசியல் தலைவரின் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தாயாருமான கிருஷ்ணகுமாரி (78) நேற்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் இன்று நடைபெறவிருக்கிறது.

தமிழிசையின் தாயார் உடல் இன்று நல்லடக்கம்

இன்று உலக புகைப்பட தினம்

புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19இல் 'உலகப் புகைப்பட நாள்' கொண்டாடப்படுகிறது. உலகின் முதல் புகைப்படம் 1826ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. ஜோசப் நீசஃபர் நீப்ஸ் என்பவர் எடுத்துள்ளார்.

இன்று உலக புகைப்பட தினம்

இதையும் படிங்க:கோடநாடு கொள்ளை: சயான் வாக்குமூலத்தால் சிக்கும் எடப்பாடி?

Last Updated : Aug 19, 2021, 7:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details