தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்டியலின புதுமணத் தம்பதிக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலின புதுமணத் தம்பதியை கோயிலுக்குள் அனுமதிக்காத பூசாரி கைது செய்யப்பட்டார்.

newlywed-dalit-couple-disallowed-from-rajasthan-temple-priest-arrested
newlywed-dalit-couple-disallowed-from-rajasthan-temple-priest-arrested

By

Published : Apr 25, 2022, 9:34 AM IST

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பட்டியலின புதுமணத் தம்பதியை பூசாரி ஒருவர் கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால், பூசாரிக்கும் மணமக்கள் குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஒரு தரப்பினர் பூசாரிக்கு ஆதரவாக வந்திருந்தனர். இதையடுத்து, மணமகளின் சகோதரர் தாரா ராம் என்பவர் அஹோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், பூசாரி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தாரா ராம் கூறுகையில் "நாங்கள் பூசாரியிடம் உள்ளே அனுமதிக்குமாறு நிறைய முறையிட்டோம். ஆனால், பூஜை பொருள்களை மட்டும் கொடுங்கள் உள்ளே வாராதீர்கள் என்று பிடிவாதமாக அனுமதிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகே, நாங்கள் போலீசில் புகார் அளித்தோம்" என்றார்.

இதையும் படிங்க:சென்னை ஐஐடி பட்டியலின மாணவி பாலியல் வன்கொடுமை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details