பெங்களூரு:கர்நாடகா மாநிலம் தக்ஷின கனடா மாவட்டத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி, அம்மாவட்டைத்தைச் சேர்ந்த யுவ ப்ரிகேட் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, அம்மாவட்டத்தையடுத்த ரெஞ்ஜிலடி என்னும் கிராமத்திலுள்ள பள்ளி வளாகத்தை சுத்தம் செய்துள்ளனர்.
ஒவ்வொரு வார இறுதியிலும் யுவ ப்ரிகேட் அமைப்பினர் அக்கிராமத்தில் இதுபோன்ற தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், புதுமண தம்பதியினர் இணைந்து நேற்று பள்ளி கழிப்பறையின் சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிப்பது, தேவையற்ற புற்களை வெட்டுவது போன்ற தூய்மைப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.