தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மறுபடியும் முதல்ல இருந்தா... இந்தியாவில் புதிய வைரஸ் - மரபணு மாறிய வைரஸ்

இந்தியாவின் வடமாநிலங்களில் பலர் கண்டறியப்படாத காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

New virus spreads in India
New virus spreads in India

By

Published : Sep 2, 2021, 6:18 PM IST

கரோனா முதல் அலையைவிட, இரண்டாம் அலை மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதற்கு கரோனா வைரஸ் உருமாறியதுதான் காரணம் என துறைசார் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கரோனா மூன்றாவது அலை, ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கி, செப்டம்பர், அக்டோபர் 2ஆவது வாரங்களில் உச்சம் பெறலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மரபணு மாறிய வைரஸ் ஒன்று உருவாகியுள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் 'மு' எனப் பெயரிட்டுள்ளது.

இது உலகிலேயே முதல்முறையாக கொலம்பியாவில் கடந்த ஜனவரியில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை, பி.1.621 என்று விஞ்ஞானிகள் வரையறுக்கின்றனர். இது தற்போது அந்நாட்டில் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதேபோல், தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் சி.1.2 என்ற புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வைரஸ்களும் தீவிரத் தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்றும், வேகமாகப் பரவக்கூடியது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களில் தாக்கம்

இந்நிலையில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக, கண்டறியப்படாத காய்ச்சல் காரணமாக, பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இதுகுறித்து வல்லுநர்கள் நடத்திய ஆராய்ச்சியில், அது 'ஸ்க்ரப் டைபஸ்' என்னும் வைரஸ் என்பது கண்டறியப்பட்டது. மைட் போர்ட் ரிக்கெட்டிசியோசிஸ் (mite-borne rickettsiosis) என்னும் வைரஸால், பலர் உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் 29-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சமுதாய வரலாற்றைப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் - துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details