சான் பிரான்சிஸ்கோ : ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளிலும் நீல பறவைக்கு பதிலாக X சின்னம் ட்விட்டர் லோகோவாக மாற்றப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். அது முதலே ட்விட்டரில் அவர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். பாதிக்கும் மேற்பட்ட ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக் பெற பயனர்கள் 8 டாலர் மாத சந்தா செலுத்த வேண்டும், நாளொன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்வீட் போட மற்றும் மற்றவர்களின் ட்வீட்டுகளை பார்க்கக்கு வரம்பு நிர்ணயம் என பல்வேறு கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார்.
இதனிடையே எலான் மஸ்கிற்கு போட்டியாக, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும், ட்விட்டருக்கு பதில் திரட்ஸ் என்ற சமூகவலைதளத்தை அறிமுகப்படுத்தியது. தொடங்கிய சில நாட்களிலேயே 15 மில்லியனுக்கு அதிகமான பயனர்கள் இணைந்ததாக திரட்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
திரட்ஸ்க்கு போட்டியாக ட்விட்டரிலும் எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். முதற்கட்டமாக ட்விட்டரின் லோகோவான நீல பறைவைக்கு பதிலாக, X என்ற சின்னத்தை லோகோவாக அறிமுகப்படுத்தினார். முதற்கட்டமாக வலைதள பதிப்புகளில் மட்டும் X லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது.