நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் 2022ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன் புதிய நாடாளுமன்றத்தை கட்டிமுடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடம் தொடர்பான கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மாநிலங்களவையில் பதிலளித்தார்.
அதில் அவர், நாடாளுமன்ற கட்டுமானத்திற்கான மதிப்பீடு ரூ.971 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பலருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் பொருளாதார மீட்சி ஏற்படும். இதுவரை 1,292 பேர் இந்த திட்டம் தொடர்பாக தங்களின் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அனைவரின் கருத்துகளையும் அரசு பரிசீலித்து திட்டத்தை செயல்படுத்தும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இலங்கை சுதந்திர தினம்: ராஜபக்சவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!