டெல்லி:எஃகு, மின்னணு, இதர பணிகளுக்கான அதிக செலவினம் காரணமாக கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூடுதல் செலவுக்கு மக்களவைச் செயலகத்தின் ஒப்புதலை மத்திய பொதுப் பணித் துறை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்காக மத்திய பொதுப் பணித் துறை, செலவு அதிகரிப்புக்கு இந்த மாத தொடக்கத்தில், மக்களவைச் செயலகத்தின் ஒப்புதலைக் கோரியது. விரிவாக்கத்திற்குப் பிறகு, திட்டத்திற்கு அசல் திட்ட மதிப்பைவிட 223 கோடி அதிகரித்து சுமார் 1200 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
புதிய நாடாளுமன்றம் கட்ட 2020ஆம் ஆண்டில் கட்டுமான நிறுவனமான டாடா புரொஜெக்ட்ஸுக்கு 971 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. கட்டடம் கட்டுவதற்கு அக்டோபர் 2022 காலக்கெடுவை நிர்ணயித்த அரசு, இந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரை புதிய கட்டடத்தில் நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நில அதிர்வு மண்டலம் 5இன் விதிமுறைகளின்படி இப்போது கட்டடம் கட்டப்பட்டுள்ளதால், எஃகுக்கான அதிக விலை உள்பட, எதிர்பார்க்கப்படும் விலை உயர்வுக்கான காரணங்களை மத்திய பொதுப் பணித் துறை கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எம்பிக்களின் மேசைகளில் டேப்லெட்டுகள் உள்ளிட்ட நவீன ஆடியோ-விஷுவல் அமைப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதால் மின்னணுப் பொருள்களுக்கான அதிக தேவையின் அடிப்படையில் செலவு உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல், அமைச்சர்களின் கூட்டரங்கு, தனி அறைகளில் உயர் தொழில்நுட்பச் சாதனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய நாடாளுமன்ற கட்டடச் செலவு கூடுதலாக ரூ.200 கோடி அதிகரிப்பு "இந்த மாத தொடக்கத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கான செலவை அதிகரிப்பதற்கான முதன்மை ஒப்புதல் முன்மொழிவைக் கோரி மத்திய பொதுப் பணித் துறையிடமிருந்து மக்களவைச் செயலகம் கோரிக்கையைப் பெற்றது, அதற்கு ஒப்புதல் கிடைக்கும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரியலூர் மாணவி தற்கொலை: உரிய நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு அறிவுறுத்தல்