பிகாரின் ஆளும் கட்சியும், பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியுமான ஐக்கிய ஜனதாதள கட்சியின் புதிய தலைவராக ராம் சந்திர பிராசத் சிங் நேற்று (டிச.27) பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனத்தை அம்மாநில முதலமைச்சரும், முன்னாள் தலைவருமான நிதீஷ் குமார் வெளியிட்டார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள ராம் சந்திர பிரசாத்துக்கு பாஜக சார்பில் அதன் செய்தித்தொடர்பாளரும், பிகார் சட்ட மேலவை உறுப்பினருமான சஞ்சய் மயூக் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். கடுமையான உழைப்பாளி ஒருவருக்கு இந்த பொறுப்பை தந்துள்ள நிதீஷ் குமாருக்கு பாராட்டுகள் எனவும் அவர் கூறியுள்ளார்.