தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மோடிட்ட பேச போறன்' மீண்டும் பாஜக - சிவசேனா கூட்டணி - ராம்தாஸ் அத்வாலே - பிரதமர் நரேந்திர மோடி ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக சிவசேனா கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

Ramdas Athawale
Ramdas Athawale

By

Published : Jun 12, 2021, 10:51 PM IST

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மும்பையில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்துடன் பாஜக, சிவசேனா இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்கலாம்.

இது தொடர்பாக பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸிடம் பேசினேன். விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இதுதொடர்பாக பேசத் தொடங்கியுள்ளேன். மேலும் மாராத்தா இடஒதுக்கீடு, புயல் பாதிப்பு குறித்தும் பேசுவேன்" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பாஜகவை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகதி கூட்டணியை அமைத்துள்ளது.

இதையும் படிங்க:கிளப்ஹவுசில் காஷ்மீர் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய திக்விஜய சிங்

ABOUT THE AUTHOR

...view details