டெல்லி : கூகுள் நிறுவனத்தின் பேமண்ட் செயலியான கூகுள் பே-யில், யுபிஐ பின் எனப்படும் ரகசிய எண்களை பயன்படுத்தாமல் சிறிய பரிவர்த்தணைகள் மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக யுபிஐ லைட் ( UPI LITE) என்ற தளத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதாவது கூகுள் பே செயலியில் யுபிஐ பின் (UPI PIN) பதிவிடாமல் ஒரே கிளிக்கில் பணம் செலுத்தும் வகையில் புதிய UPI LITE சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. இப்போது வரை எந்தவொரு யுபிஐ பேமண்ட் ஆக இருந்தாலும் யுபிஐ பின் அல்லது பாஸ்வேர்டு கொடுக்க வேண்டி உள்ளது.
ஆனால் இனிமேல் பின் பதிவிடாமல் பேமெண்ட் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் யுபிஐ லைட் சேவையை அறிமுகம் செய்தது. அதிலும் பின் பதிவிடாமல் யார் வேண்டுமானாலும் பேமன்ட் செய்ய முடியும் வசதி கொண்டு வரப்பட்டது. தற்போது இதே சேவையை தான் கூகுள் பே-யும் அறிமுகம் செய்து உள்ளது.
அதேபோல் இந்த யுபிஐ லைட் சேவை வங்கி கணக்குடன் இணைப்பட்டு இருந்தாலும் ஒவ்வொரு முறையும் வங்கி கணக்கில் இருந்து நிகழ் நேரத்தில் பணம் செல்வாகாது என்று கூறப்படுகிறது. அதவாவது வங்கி கணக்கில் இருந்து உடனே பணம் டெபிட் ஆகாமால் அதற்கு மாறாக யுபிஐ லைட் சேவையின் வேலெட்டில் குறிப்பிட்ட தொகையை பதிவேற்றம் செய்துகொண்டு அதன் மூலம் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்யலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.