தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்: புரட்சியை ஏற்படுத்துமா? புதிய எக்ஸ்-ரே டிடெக்டர்கள்! - timely treatment for cancer

National Cancer Awareness Day: தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுவதாலும், பழைய செல்கள் இறக்காமல் இருந்தாலும், அவை ஒன்று சேர்ந்து புற்றுநோய் கட்டியாக மாறலாம். இவை தீவிரமடையும் பட்சத்தில் உயிருக்கே ஆபத்தாகிறது. இந்நிலையில் சர்ரே பல்கலைக்கழகத்தால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எக்ஸ்-ரே டிடெக்டர்கள் புற்றுநோய் சிகிச்சையில் புதிய புரட்சியை ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் கூறுகிறது.

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 8:23 PM IST

லண்டன்:புற்றுநோய், அதன் சிகிச்சை மற்றும் அறிகுறிகளைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்காக இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 7ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

புகைப்பிடித்தல், அதிக உடல் நிறை குறியீட்டெண், குடிப்பழக்கம், சில பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது மற்றும் போதுமான உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால், மூன்றில் ஒரு பங்கு இறப்புகள் புற்றுநோயால் ஏற்படுகின்றன.

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முதன்முதலில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் செப்டம்பர் 2014 இல் அறிவித்தார். எனவே 2014 ஆம் ஆண்டில், முதன்முறையாக இந்த நாள் கொண்டாடப்பட்டது மற்றும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து குணப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

இதனால் தற்போது புற்று நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அனைவருக்கும் சமமான புற்றுநோய் சிகிச்சையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் (close the care gap) என்பது இந்த வருட தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சர்ரே பல்கலைக்கழகத்தால் புதிதாக எக்ஸ்-ரே டிடெக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எக்ஸ்-ரே டிடெக்டர்கள் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மட்டுமின்றி இந்த புதிய எக்ஸ்-ரே டிடெக்டர்கள் விமான நிலையத்தில் சோதனைக்காகப் பயன்படுத்துவது போன்ற பிற செயல்களுக்காகவும் பயன்படலாம் என கூறப்படுகிறது.

பொதுவாக எக்ஸ்-ரே டிடெக்டர்கள் அதிக எடையுடன், கனமான சிலிக்கான் அல்லது ஜெர்மானியம் கொண்டு தயாரிக்கப்படும். ஆனால் இந்த புதிய பிளக்சிபிள் எக்ஸ்-ரே டிடெக்டர்கள் மலிவானவை. மேலும் இவை ஸ்கேன் செய்ய வேண்டிய பொருட்களைச் சுற்றி வடிவமைக்கப்படலாம் என்பதால் இவை நோயாளிகளைப் பரிசோதிக்கும் போது துல்லியத்தை மேம்படுத்தும்.

கட்டிகளை இமேஜிங் செய்யும் போது அதாவது உடலில் தொற்று, கட்டி அல்லது புற்றுநோய் திசுக்களை கண்டறியும் செயல்முறையின் போதும் மற்றும் கதிரியக்க சிகிச்சையை வழங்கும் போதும் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கலாம் என்று அட்வான்ஸ்டு சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இயந்திரம் பிளக்சிபிளாகவும், குறைந்த விலையும் கொண்டதாகவும் இருக்கிறது. மேலும் இந்த பொருள் நம் திசுக்களுக்குச் சமமானதாக இருப்பதால் இவை நேரடியாகக் கதிர்வீச்சின் அளவை கண்டறியவும் பயன்படும். ஆனால் இவை தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் சாத்தியமில்லை என இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சர்ரே பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய டாக்டர் பிரபோதி நாணயக்கார கூறியுள்ளார்.

ஆராய்ச்சியாளர்களை பொருத்தவரை ஹைட்ரஜன் மற்றும் கார்பனால் உருவாக்கப்பட்டுள்ள இவை அதிகம் நெகிழும் தன்மையை வழங்குகிறது. ஆனால் இப்போது வரை, பழைய டிடக்டர்களால் ஒரு எக்ஸ்-ரே படத்தை உருவாக்கவில்லை. இதனை சரி செய்ய, விஞ்ஞானிகள் குறைந்த அளவிலான அதிக அணு எண் கூறுகளை ஒரு கரிம குறைக்கடத்தியில் சேர்ப்பதன் மூலம் ஒரு மையைக்கொண்டு இந்த சாதனங்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த புதிய தொழில்நுட்பத்தைக் கதிரியக்க சிகிச்சை, வரலாற்றுக் கலைப்பொருட்களை ஸ்கேன் செய்தல் மற்றும் பாதுகாப்பு ஸ்கேனர்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் பயன்படுத்தப்படலாம்" என்று சர்ரேயின் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ரவி சில்வா கூறியுள்ளார்.

இந்த புதிய டிடெக்டர் எக்ஸ்-ரே கதிர்களின் கீழ் மனித திசுக்களைப் போலவே செயல்படுகிறது, இது கதிரியக்க சிகிச்சை, மேமோகிராபி எனப்படும் புற்றுநோய் மற்றும் பிற மார்பக நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக மார்பகத்தை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும்எக்ஸ்-ரே இமேஜிங் முறை மற்றும் ரேடியோகிராபி எனப்படும் மனித உடலை உள்ளடக்கிய திசுக்கள், உறுப்புகள், எலும்புகளின் படங்களை வழங்க கதிர்வீச்சைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை வழங்குவதற்கான புதிய பாதுகாப்பான நுட்பங்களுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மது குடிக்காதோருக்கும் வரலாம் கல்லீரல் பாதிப்பு…மருத்துவர்கள் சொல்வது என்ன?

ABOUT THE AUTHOR

...view details