உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், புதிய கல்வி கொள்கை மூலம் இந்திய மொழிகளை மேம்படுத்துவதில் மோடி அரசின் உறுதி வெளிப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை மூலம் இந்திய மொழிகளை மேம்படுத்துவதில் மோடி அரசு உறுதி - அமித் ஷா - அமித் ஷா
டெல்லி: புதிய கல்வி கொள்கை மூலம் இந்திய மொழிகளை மேம்படுத்துவதில் மோடி அரசின் உறுதி வெளிப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமித் ஷா
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதற்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். கலாசார பாரம்பரியத்துடன் தொடர்ந்து இணைந்திருக்க இந்நாள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது.
தாய் மொழியை பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் கலாசார அடித்தளத்தை வலுப்படுத்த மொழிகளின் மூலம் குழந்தைகளின் அறிவை வளர்த்தெடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.