புபனேஷ்வர்:ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்திலிருந்து தென் - தென்கிழக்கு திசையில் 850 கி.மீ தொலைவிலும், ஜகத்சிங்பூர் மாவட்டத்திலிருந்து தென் - தென்கிழக்கு திசையில் 920 கி.மீ., தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைப்பெற்றுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்திற்குத் தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று(3/12/21) காலை காற்றழுத்த மண்டலம் புயலாக தீவிரமடைந்துள்ளது.
இப்புயலானது நாளை (4/12/21) காலை அன்று வட ஆந்திரா மற்றும் வட ஒடிசா கடலோரப் பகுதிகள் வாயிலாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பல மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4), நாளை மறுதினம் (டிசம்பர் 5) ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜவாத் புயலால் தமிழ்நாட்டின் எண்ணூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி, பாம்பன் ஆறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஒமைக்ரான் வகை எவ்வாறு மாறுபடுகிறது? அறிந்து கொள்ளுங்கள்!