நாட்டின் பொது சுகாதார ஆயத்தநிலை, கோவிட்-19 தடுப்பூசி நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர் அலுலவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, நிதி ஆயோக் உறுப்பினர்(சுகதாரம்) டாக்டர் வி.கே.பால், உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் கோவிட்-19 தொற்றுப் பரவலின் உலகளாவிய நிலவரம், நோயின் தன்மை குறித்து பிரதமருக்கு விளக்கிக் கூறப்பட்டது. ‘ஒமிக்ரான்‘(Omicron) எனப்படும் புதிய வகை உருமாறிய தொற்று ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதன் தன்மைகள் மற்றும் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும், அலுவலர்கள் பிரதமரிடம் விளக்கம் அளித்தனர்.