ஆதோனி(ஆந்திரா):காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆந்திராவில் பாரத் ஜோடா யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தியிடம் புதிய தலைவர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அவர், "காங்கிரஸில் எனது பங்கு என்ன? நான் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? என்பது குறித்து புதிய தலைவர் தான் முடிவு செய்வார். காங்கிரஸில் தலைவருக்குத்தான் உச்ச அதிகாரம் உள்ளது.
அதனால் கட்சியில் உள்ள அனைவரும் எல்லாவற்றையும் அவரிடம்தான் முறையிட வேண்டும். அந்த வகையில் என்னுடைய பணி என்ன? என்பதை தலைவர் முடிவு செய்வார் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.