தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவமனையில் தீ விபத்து: பெண் குழந்தை உயிரிழப்பு - மருத்துவமனையில் தீ விபத்து

அசாம்: திப்ருகார் மாவட்டத்தில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் கடந்த 5ஆம் தேதி பிறந்த குழந்தை நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தது.

chennai
chennai

By

Published : Nov 9, 2020, 12:42 PM IST

மருத்துவமனையின் தீவிர சிகிதச்சை பிரிவுக்கு (ICU) மின்சார இணைப்பை முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து, ஒரு யூனிட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மின்சாரக் கசிவு ஏற்பட்டு தீ, கர்ப்பிணி பெண்கள் இருக்கும் வார்டுக்கு பரவியது. தீ மேலும் பரவுவதைத் தடுக்க மருத்துவமனை அலுவலர்கள் மின்சார இணைப்பை துண்டித்துள்ளனர்.

இதில், உயிருக்கு பயந்து வெளியேறியே பெண்கள் சிலர் காயமடைந்தனர். இதில், ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நவம்பர் 5ஆம் தேதி பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இருப்பினும் இதுகுறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க மறுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க:'வீழ்வது தொழிலாளர் விரோதப்போக்காக இருக்கட்டும்; வெல்வது தொழிலாளர்களின் ஒற்றுமையாக இருக்கட்டும்!'

ABOUT THE AUTHOR

...view details