தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாம் அரசு மருத்துவமனை பிறந்த 3 நாளான பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

திஸ்பூர்: திப்ருகார் மாவட்டம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் ஐசியு பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் குழந்தையொன்று மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.

baby dies
baby dies

By

Published : Nov 9, 2020, 5:40 PM IST

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் ஐசியு பிரிவில் நேற்று (நவ. 08) திடீரென மின் கசிவு ஏற்பட்டது. இதனைக் கண்ட மருத்துவ ஊழியர்கள் மகளிர் மருத்துவ பிரிவிலிருந்த கர்ப்பிணிகள், அவர்களது உறவினர்கள் பத்திரமாக மீட்டகப்பட்டனர்.

அங்குள்ள தீ மற்ற வார்டுக்குப் பரவாமல் இருக்க மருத்துவமனையின் மின் இணைப்பை ஊழியர்கள் முழுவதுமாகத் துண்டித்துள்ளனர். இதனால் குழந்தைகள் சிகிச்சை அளிக்கும் ஐசியு பிரிவில் வைக்கப்பட்டிருந்த பிறந்து மூன்று நாளான பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.

அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாளான பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details