தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியிலிருந்து சீரடி, திருப்பதிக்கு புதிய விமான சேவை!

செப்டம்பர் மாதம் முதல் புதுச்சேரியிலிருந்து சீரடி, திருப்பதி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு விமான சேவை தொடங்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக, புதுவையிலிருந்து ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்படுகிறது.

new air service to sheeradi and thirupathi
new air service to sheeradi and thirupathi

By

Published : Feb 4, 2021, 6:22 PM IST

புதுச்சேரி: சீரடி, திருப்பதி ஆகிய ஆன்மிக தலங்களுக்கு புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

புதுவை விமான நிலையம் லாஸ்பேட்டையில் அமைந்துள்ளது. கரோனா தொற்று பரவல் தொடங்கிய 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் புதுச்சேரியிலும் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதுவரை புதுச்சேரியிலிருந்து தினசரி சேவையாக, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இச்சூழலில், தனியார் விமான சேவை நிறுவனம், புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு விமானங்களை இயக்க முடியாது எனக்கூறி, விமான நிலைய அலுவலர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அரசு, எரிபொருள், கட்டண சலுகைக்கான தொகையினை வழங்காததால், இந்த முடிவை, அந்த விமான நிறுவனம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஓராண்டு காலத்தில் மக்களின் வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமா? அதிர்ச்சி ரிப்போர்ட்

இச்சூழலில், ஆப்கானிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும், ஷஃபி ஏர்வேஸ் நிறுவனம் புதுச்சேரியிலிருந்து திருப்பதி, சீரடி, பெங்களூரூ, மதுரை, கோவை, கொச்சின் போன்ற நகரங்களுக்கு முதற்கட்டமாக விமானங்களை இயக்க முன்வந்துள்ளது. இவை செப்டம்பர் மாதம் முதல் தங்கள் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல், புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் சேவையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details