நொய்டா: கடந்த மார்ச் 20ஆம் தேதி, பாலிவுட் இயக்குநர் வினோத் காப்ரி தனது ட்விட்டரில் வெளியிட்ட காணொலி வைரலானது.
அதில் அவர், ''தனது கடமைகளையும் கனவுகளையும் சரியான அளவுகோலில் வைத்துப் பயணிக்கும் இந்த இளைஞனின் காட்சி உங்களின் முகங்களைப் புன்னகை செய்ய வைக்கும்'' என்ற வாசகத்துடன் அந்தக் காணொலியைப் பதிந்திருக்கிறார்.
ராணுவத்தில் சேர பாடுபடும் இளைஞன்
இயக்குநர் வினோத் ராய், எதேச்சையாக காரில் செல்லும்பொழுது ஒரு இளைஞன் பையுடன் வீட்டை நோக்கி ஓடுவதைப் பார்த்துள்ளார். தன்னுடைய காரில், அந்த இளைஞனை அவர் போகும் இடத்தில் இறக்கி விடுவதாகவும் இயக்குநர் வினோத் ராய் கூறியுள்ளார். ஆனால், அந்த இளைஞர் அதை மறுத்துள்ளார். அந்த இளைஞர் மெக் டொனால்ட்ஸில் வேலை செய்பவர்.
அந்த இளைஞரின் பெயர் பிரதீப் மெஹ்ரா. இவர் உத்தரகாண்டைச் சேர்ந்தவர். இவர், தற்பொழுது நொய்டாவில் தனது சகோதரரின் வீட்டில் தங்கி வருகிறார். இவரது தாயார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ராணுவத்தில் சேர ஆசையுள்ள பிரதீப், தினமும் வேலை முடிந்து வீடு திரும்பும்போது ஓடி வந்தே தனது ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொள்வாராம்.