தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் நெதர்லாந்து! - 449 வெண்டிலேட்டர்கள், 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்

நெதர்லாந்திலிருந்து விமானம் மூலம் 449 வென்ட்டிலேட்டர்கள், 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன.

கரோனா: இந்தியாவிற்கு உதவிகரம் நீட்டும் நெதர்லாந்து!
கரோனா: இந்தியாவிற்கு உதவிகரம் நீட்டும் நெதர்லாந்து!

By

Published : May 7, 2021, 3:09 PM IST

டெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரம் பேர் தினமும் உயிரிழந்து வருகின்றனர். பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

நெதர்லாந்தில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்த 449 வெண்டிலேட்டர்கள், 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்

அந்த வகையில் நெதர்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலமாக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 449 வென்ட்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் இன்று(மே.7) அதிகாலை இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளன. இந்த தகவலை இந்தியாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்‌ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்‌ஷி பதிவிட்டுள்ள ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details