நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஸின் 125ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேதாஜிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை வைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாடு முழுவதும் நேதாஜியின் 125ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் அவருக்கு கிரனைட்டால் செய்யப்பட்ட பிரம்மாண்ட சிலை ஒன்றை இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்படும். இந்தியா அவருக்கு பட்டிருக்கும் நன்றிக் கடனுக்கு இது சின்னமாக அமையும்.