தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 7, 2020, 9:10 AM IST

ETV Bharat / bharat

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் அறிவிப்பு!

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தின் புதிதாக அளவிடப்பட்ட உயரத்தை நேபாள அரசு நாளை (டிச. 08) அறிவிக்க உள்ளது.

Revised height of Mt Everest  Mt Everest's height  world's tallest peak's height  China-Nepal deal  Nepal announce revised height of Mt Everest  2015 earthquake  height of Mount everest changed after earthquake  எவரெஸ்ட் சிகரம்  எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் அறிவிப்பு  எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம்
Mt Everest's height

உலகின் மிக உயர்ந்த சிகரத்தை அளவிடுவது தொடர்பான தரவுகளைச் செயலாக்குவதில் ஒரு வருடம் பணியாற்றிய பின்னர், புதிதாக அளவிடப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை செவ்வாய்க்கிழமை நேபாளம் அறிவிக்கவுள்ளது.

இது தொடர்பாக அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் ஒரு அழைப்பை அனுப்பி, நடவடிக்கைகளை மேற்கொண்ட கணக்கெடுப்புத் துறை, புதிய உயரத்தை அறிவிக்க திட்டமிடப்பட்ட நிகழ்வு குறித்து அறிவித்தது. "நாளை (டிச. 08) பிற்பகல் எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை அறிவிக்க உள்ளோம்" என்று இமயமலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் சுஷில் நர்சிங் ராஜ்பந்தாரி உறுதிப்படுத்தினார்.

நாட்டின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை அளவிடுவதற்கான முயற்சியை நேபாளம் மேற்கொண்டது, பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உயரமான எட்டாயிரத்து 848 மீட்டர் என்பது 2015ஆம் ஆண்டு நிலநடுக்கத்திற்குப் பிறகு உண்மையான உயரமாக இருக்காது.

2019ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நேபாள பயணத்தின்போது, ​​இரு நாடுகளும் இணைந்து உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை கூட்டாக அறிவிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

சர்வே ஆஃப் இந்தியா 1954இல் அளவிடப்பட்ட, எட்டாயிரத்து 848 மீட்டர் என்பது சாகர்மாதாவின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உயரம் ஆகும், இது உலகின் மிக உயரமான சிகரத்திற்கான நேபாள பெயர்.

இதையும் படிங்க:எவரெஸ்டின் உயரத்தில் குழப்பமா? - புதிய உயரத்தை அறிவிக்கத் தயாராகும் நேபாளம்!

ABOUT THE AUTHOR

...view details