நேபாளத்தின் பொக்காரா நகரில் இருந்து 19 பயணிகளுடன் ஜோம்சோம் நகரை நோக்கி சென்ற, தாரா ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
இதில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள், 2 ஜெர்மானியர்கள் உள்பட 22 பேர் இருந்தனர். விமானம் மாயமானதை உறுதி செய்த அதிகாரிகள், உடனடியாக இரண்டு தனி ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணியை தொடங்கினர்.
சுமார் ஆறு மணி நேரமாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திரிபுவன் சர்வதே விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவாங் என்ற இடத்தில் விமானம் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விமானத்தின் நிலை மற்றும் அதில் பயணித்தவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: நேபாளத்தில் 22 பயணிகளுடன் விமானம் மாயம்