தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் கல்வி முறையை தேசிய கல்விக் கொள்கை உலகளாவிய அளவுகோலுக்கு மாற்றும் - இந்தியாவின் கல்வி முறை

தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியாவின் கல்வி முறையை உலகளாவிய அளவுகோலுக்கு ஏற்ப மாற்றும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Jitendra Singh
Jitendra Singh

By

Published : Sep 3, 2022, 8:56 AM IST

டெல்லியில் நடந்த கல்வி உச்சி மாநாட்டில் மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். அப்போது அவர், "புதிய கல்விக் கொள்கை முற்போக்கான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது மட்டுமல்ல. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சீர்திருத்தம். இது 21ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப உள்ளது.

மாணவர்களின் பட்டப்படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், அறிவு, திறன் வளர்த்தல் உள்ளிட்டவைக்கும் முன்னுரிமை அளிக்கிறது. மாணவர்கள் அவர்களது திறமை மற்றும் தனிப்பட்ட சூழல்களுக்கு ஏற்றவாறு விருப்பங்களை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது.

இந்த கொள்கை உள்ள நெகிழ்வுத்தன்மை வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு தொழில் வாய்ப்புகளை பெறுவதில் மாணவர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். தற்போது 40 மில்லியன் இந்தியர்கள் உயர் கல்வி பயில்கின்றனர். புதிய கல்விக் கொள்கை இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முயல்கிறது.

தேசிய கல்விக் கொள்கையின் பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்று, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களில் தொழில்முனைவோர்களை இணைப்பதற்கான வாய்ப்பளிப்பது. இது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகக் குறுகிய காலத்தில் உத்வேகம் கிடைக்கும். இந்த தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியாவின் கல்வி முறையை உலகளாவிய அளவுகோலுக்கு ஏற்ப மாற்றும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "வளர்ந்த இந்தியாவை உருவாக்க, நாட்டின் உற்பத்தித் துறையை மேம்படுத்துவது மிக அவசியம்"

ABOUT THE AUTHOR

...view details