தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஸ்டாலினோ நீங்களோ முதல் தேர்தலில் வெற்றி பெறவில்லை' - சந்திரசேகர ராவுக்கு அண்ணாமலை பதிலடி - அண்ணாமலை

சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை தான் தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்க போகிறார என விமர்ச்சித்திருந்த சந்திரசேகர் ராவுக்கு அண்ணாமலை ட்விட்டரில் பதிலடி அளித்துள்ளார்.

”ஸ்டாலினோ நீங்களோ முதல் தேர்தலில் வெற்றி பெறவில்லை” சந்திரசேகர் ராவுக்கு அண்ணாமலை பதிலடி
”ஸ்டாலினோ நீங்களோ முதல் தேர்தலில் வெற்றி பெறவில்லை” சந்திரசேகர் ராவுக்கு அண்ணாமலை பதிலடி

By

Published : Sep 13, 2022, 3:10 PM IST

மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருபவர், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ். இவர் வருகிற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரேவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் சந்திரசேகர் ராவுக்கும் வரும்; எங்களிடம் நிறைய ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார்கள்; தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக தெலங்கானா சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், "மோடி அரசால் நாட்டில் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகி வருகிறது. நாட்டில் இதுவரை 10 மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டு, அங்கு சட்ட விரோதமாக பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஓராண்டுதான் நிறைவடைந்துள்ளது. அதற்குள் அங்குள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஏக்நாத் ஷிண்டே உருவாக வாய்ப்புள்ளது என்று பேசுகிறார்.

அண்ணாமலையால் அவரது சொந்த தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. சொந்த தொகுதியில் வெற்றியை பெற முடியாத அண்ணாமலை தான் தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்கப் போவதாக கூறுகிறார்” என்று விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர், ''தெலங்கானாவில் நடைபெறும் அனைத்து பிரச்னைகளுக்கும் கே. சந்திரசேகர ராவின் குடும்ப ஆட்சியே காரணம். இந்த நிலையில் தெலங்கானா சட்டப்பேரவையில் என்னைப்பற்றி பேசி, கேசிஆர் நேரத்தை செலவிட்டுள்ளார்.

நீங்களோ, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினோ முதல் தேர்தலிலேயே வெற்றி பெறவில்லை என்பதை கேசிஆருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். நமது பணிகள் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதை இலக்காக கொண்டிருந்தால், தேர்தலில்களில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் ஒரு விஷயமாகவே இருக்காது. தெலங்கானா மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக நீங்கள் இழந்துவிட்டீர்கள் என நான் நினைக்கிறேன்” என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:யாருக்காக ஷிண்டே வருகிறார்? யாரை மிரட்டுகிறார்கள்? - பாஜக அண்ணாமலைக்கு எதிராக சீறிப்பாய்ந்த கேசிஆர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details