டெல்லி: G20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நேற்று மற்றும் இன்று (செப்.9 மற்றும் செப.10) நடைபெற்று வருகிறது. இதற்காக டெல்லி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கான்வாய் வாகன ஓட்டுநர் கவனக் குறைவாக பாதை மாறி பாதுகாப்பு எச்சரிக்கையை மீறியதால் கான்வாய் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடரணியில் இருந்த கான்வாய் வாகனம் தவறுதலாக ஐக்கிய அரபு நாட்டின் தலைவர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தங்கியிருந்த தாஜ் ஹோட்டலுக்குள் நுழைய முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களால் தடுக்கப்பட்டு ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். மேலும் ஓட்டுநர் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாஜ் ஹோட்டலுக்கு கான்வாய் கார் ஒன்று ஏராளமான ஸ்டிக்கர்களுடன் வந்தது இதனை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் அடைந்து கான்வாய் காரை பரிசோதனை செய்தனர். மேலும் ஓட்டுநரை விசாரணை செய்தனர். அப்போது, ஓட்டுநர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கியிருந்த ஐடிசி ஹோட்டலுக்கு காலை 9:30 மணிக்கு செல்ல இருந்ததாக விளக்கினார்.
மேலும் தொழில் அதிபர் ஒருவரை இறக்கிவிட தாஜ் ஹோட்டலுக்கு வந்தாக தெரிவித்துள்ளார். மேலும் கான்வாய் ஓட்டுநருக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றி தெரியாததால் இப்பகுதியில் வந்து இருக்கிறார் என்று அறிந்த பாதுகாப்பு காவல்துறையினர் ஓட்டுரை முழுமையான விசாரணைக்கு பின் விடுவித்தனர்.
மேலும் பாதுகாப்பு கருதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கான்வாய் வாகனத்திலிருந்து அந்த வாகனத்தை விலக்கினர். மேலும், அதிபரின் கான்வாய் வாகனம் முழுவதும் சோதனை செய்ததுடன் அதிபர் வருகையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நடவடிக்கை முழுவதும் மறுபரிசீலனை செய்து பாதுகாப்பை அதிகரித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.8) டெல்லி வந்தார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் உடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. மேலும் G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் பைடன் சர்வதேச கூட்டாண்மையை வலுப்படுத்தவும், உலகளாவிய பிரச்னைகள் கூறித்தும் பேசினார். இன்று (செப்.10) காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அமெரிக்க அதிபர் வியட்நாம் புறப்பட்டு சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:ஜி20 விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின்.. அமெரிக்க அதிபருடன் கலந்துரையாடல்!