டெல்லி: மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (ஜூலை 12) தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், "வரும் செப்டம்பர் 12ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். இதற்கான விண்ணப்ப நடைமுறைகள் ஜூலை 13ஆம் தேதி மாலை 5 மணி முதல் தொடங்கும்" எனக் கூறியிருந்தார்.
அதன்படி, இன்று மாலை 5 மணியிலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. மருத்துவப் படிப்பு படிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை என்டிஏ வலைதளத்தில் பதிவுசெய்து வருகின்றனர்.
விண்ணப்பப்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் வலைதளத்தைப் பயன்படுத்தியதால், இணையதளம் முடங்கியது. அதனைச் சரிசெய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: நீட் பாதிப்பு ஆய்வுக் குழு: விரைவில் அறிக்கை!