கடந்த மே மாதம் 21ஆம் தேதி, முதுநிலை நீட் ( PG NEET) தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு 267 நகரங்களில் 849 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை 2,006,301 பேர் எழுதினர்.
இந்நிலையில், நீட் முதுநிலை தேர்வு முடிவு குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், “முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேர்வில் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். 10 நாட்களிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டதற்கு தேசிய தேர்வு வாரியத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகள்,natboard.edu.inதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ப.சிதம்பரம் உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் மாநிலங்களவைக்கு தேர்வாகின்றனர்!