இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வு ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் நடைபெறும்.
பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு - நீட் நுழைவுத்தேர்வு 2021
21:51 March 12
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
அத்துடன் வரும் கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு வைக்கப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படுகிறது. இந்தாண்டு நர்சிங் படிப்பிற்கும் நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு இந்தத் தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதையும் படிங்க:நீட் தேர்வு முறைகேடு.. வேறு மாநிலத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா?