டெல்லி:நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 7ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 449 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். 499 நகரங்களில் 4,097 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் இத்தேர்வை மாணவர்கள் எழுதினர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான விடைக்குறிப்பு (answer key), இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. அத்துடன் ஸ்கேன் செய்யப்பட்ட OMR விடைத்தாளையும் மாணவர்கள் காண முடியும். விடைத்தாள் குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஒவ்வொரு பதிலுக்கு ரூ.200 கட்டணமாக செலுத்தி முறையீடு செய்யலாம். மாணவர்கள் இந்த கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேக்கிங், பேடிஎம் ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம்.
ஆனால் விடைக்குறிப்புகள் குறித்து முறையீடு செய்வதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு கடைசி நாள் ஜூன் 6ம் தேதி (இரவு 11.50) ஆகும். பணம் செலுத்தியதற்கான ரசீது இல்லாமல், முறையீடு செய்ய முடியாது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. விடைகள் குறித்து மாணவர்களின் முறையீடு தொடர்பாக ஆய்வு செய்ய வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மாணவர்கள் கூறுவது சரியாக விடையாக இருந்தால், திருத்தம் செய்யப்பட்ட விடைக்குறிப்பு வெளியிடப்படும்.
விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கம் வருமாறு:
* neet.nta.nic.in என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
* NEET-UG 2023 என்ற லிங்கை க்ளிக் செய்க
* NEET-UG 2023 இணைய பக்கம் திரையில் வந்தவுடன், answer key என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்