பானிபட் (ஹரியானா): இந்தியாவின் தங்க மகன் என்று அழைக்கப்படும் நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார். நீரஜ் சோப்ரா ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களை குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். நீரஜ் சோப்ரா இவ்வாளவு சாதனைகள் படைக்க அவர் கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்ததே காரணம் என அவரது தந்தை சதீஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இதையும் படிங்க:Neeraj Chopra: "தங்க மகன்" நீரஜ் சோப்ரா... கடந்து வந்த பாதை!
இது தொடர்பாக நீரஜ் சோப்ராவின் தந்தை சதீஷ் சோப்ரா ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். என்னுடைய சிறு வயதிலேயே எனது தந்தை தரம் சிங் சகோதரர்களையும் பிரிந்து இருக்கக் கூடாது. அது தற்போது வரை எனது மனதில் உள்ளது. இதனால் நாங்கள் நான்கு பேரும் ஒன்றாகவே இருந்து வருகிறோம். இவ்வாறு கூட்டுக் குடும்பமாக இருந்து வளர்ந்ததே நீரஜ் சோப்ராவின் வெற்றிக்கு காரணம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “ஒரு மரத்தை வெட்டுவது எளிது. ஆனால், அந்த மரத்தின் கட்டையை வெட்டுவது மிகவும் கடினம் என்ற கொள்கையின் அடிப்படையில் எனது குடும்பம் இருந்து வருகிறது. பீம் சோப்ரா, சுல்தான் சோப்ரா மற்றும் சுரேந்திர சோப்ரா ஆகிய மூன்று சகோதரர்கள் உள்ளனர். இதில் பீம் சோப்ரா எனது குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் கல்வி, விளையாட்டு ஆகிய பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறார்.
சுல்தான் சோப்ரா விவசாயத்தினை கவனித்துக் கொள்கிறார். சுரேந்திர சோப்ரா மற்ற முக்கிய பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறார் மற்றும் நான் பார்வையாளர்களை சந்திப்பது ,குடும்பத்தின் பிற பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
நீரஜ் சோப்ராவின் சித்தப்பா பீம் சோப்ரா கூறும்போது, “ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சிகள் நீரஜ் சோப்ராவிடம் பேசிய பின்பே நடத்தப்படும். நீரஜ் சோப்ரா முன்பு இன்னும் பல போட்டிகள் உள்ளது. அதற்காக அவர் தயாராகி வருகிறார். நீரஜ் சோப்ரா ஜூனியர் உலக சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். டயமண்ட் லீக்கையும் வென்றுள்ளார். இந்திய ராணுவத்தில் சுபேதாராக உள்ளார். நீரஜ் சோப்ரா தனது பெயருக்கு முன்னால் பல பட்டங்களை பெற்றுள்ளார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:4×400 Metres Relay: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த இந்திய அணி.. பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து!