தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லாசன் டயமண்ட் லீக் இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா - காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சுவிட்சர்லாந்தின் லாசனில் நடைபெறவுள்ள டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.

லாசன் டயமண்ட் லீக் இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா
லாசன் டயமண்ட் லீக் இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா

By

Published : Aug 24, 2022, 10:16 AM IST

புது டெல்லி: ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு கடந்த மாதம் இடுப்பு வலி ஏற்பட்டது. இந்த காயம் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்டதால், காமன்வெல்த் போட்டியில் இருந்து நீரஜ் சோப்ரா வெளியேறினார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்தின் லாசனில் நடைபெறவுள்ள டயமண்ட் லீக் இறுதி போட்டிக்கான தரவரிசையில், தடகள வீரர் நீரஜ் சோப்ரா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இதனால் நீரஜ் சோப்ரா செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சூரிச்சில் நடைபெறும் டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீரஜ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், "வெள்ளிக்கிழமைக்கு வலுவாகவும் தயாராகவும் இருப்பதாக உணர்கிறேன். அனைவருடைய ஆதரவிற்கும் நன்றி. லாசனில் சந்திப்போம்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Video: தொடை காயத்தால் தங்கத்தை தவறவிட்டேன் - நீரஜ் சோப்ரா விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details