நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், பெருந்தொற்று கட்டுப்பாடு விதிமுறைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. புதிய கட்டுப்பாடுகளின்படி, திருமண மண்டபங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்படவுள்ளனர்.
திருமண மண்டபங்களில் ராணுவ வீரர்கள் - கரோனாவை கட்டுப்படுத்த கர்நாடக அரசு தீவிரம்! - corona virus
பெங்களூரு: கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அதேபோல், நிகழ்ச்சிகளில் 500 பேருக்கு மேல் அனுமதி வழங்கப்படாது, முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, கல்புர்கி மாவட்டத்தில் பயண வழிகாட்டுதல்கள் விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக-மகாராஷ்டிரா எல்லையில் ஐந்து சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்ராவிலிருந்து அப்சல்பூர், அப்சல்பூர் ஆகிய வழிகளில் கர்நாடகாவிற்குள் நுழைபவர்கள் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.